Tuesday, May 15, 2018

"நம்ம சென்னை' செயலி மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களைப் பெறலாம்

By DIN | Published on : 15th May 2018 02:55 AM |

"நம்ம சென்னை' செயலி மூலம் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுள றித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்கும் விதமாக "நம்ம சென்னை' என்ற செயலி கடந்த ஜனவரி 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலியை இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 3,738 புகார்கள் பெறப்பட்டு அதில் 3,688 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 புகார்கள் விரைவில் சரிசெய்யப்படும்.

பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறலாம்: தற்போது, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், "நம்ம சென்னை' செயலியில் பிறப்பு, இறப்பு, சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் ஆகிய சான்றுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் செயலியைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறலாம்.

மேலும், சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் ஆகியவற்றின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கான வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024