Sunday, June 10, 2018

தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்

Added : ஜூன் 10, 2018 04:13




தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலில், கேரளாந்தகன் நுழைவு வாயிலிலிருந்து, பறந்த தேனீக்கள் கொட்டியதில், 10 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர், பெரிய கோவில் கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில், 5 ம் தேதி, இடி தாக்கியதில், சுதை யாழி பொம்மை சேதமடைந்தது. அதை சீரமைக்கும் பணிக்காக, நேற்று, கோவில் பணியாளர்கள் இரும்பு கம்பியாலான சாரம் அமைத்தனர்.அப்போது, கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து, அதிலிருந்து தேனீக்கள் பறந்தன. அவை, பக்தர்களை துரத்திக் கொட்டின. இதனால், கோவில் பணியாளர்கள் ஐந்து பேரும், ஒரு பெண் உட்பட, பக்தர்கள் ஐந்து பேரும் காயமடைந்தனர்.
அதனால், கேரளாந்தகன் கோபுர நுழைவு வாயில், ஒரு மணி நேரம் மூடப்பட்டது. கோவில் உள்ளே இருந்த பக்தர்கள், சிவகங்கை பூங்கா வாயில் வழியாக வெளியேறினர்.தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து, வாகனத்துடன் வந்த வீரர்கள், தேன் கூட்டை அகற்ற மறுத்து விட்டனர். ஏற்கனவே, ஒரு முறை தேனீக்கள் பக்தர்களை கொட்டிய போது, தேன் கூட்டை அகற்றியதற்கு, தொல்லியல் துறையினர், ஆட்சேபனை தெரிவித்து, தகராறு செய்துள்ளனர். அதனால், தற்போது, முதலுதவிக்கு மட்டுமே வந்ததாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024