Sunday, June 10, 2018

ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது தமிழக மாணவி கீர்த்தனாவுக்கு 5ம் இடம்: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 12ம் இடம் பிடித்தவர்


புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று மாலை ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 5ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இவர் ஏற்கனவே நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 12ம் இடமும் தமிழக அளவில் முதலிடம் பெற்றவர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள் மட்டுமின்றி காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப நடப்பாண்டுக்கான நுழைவு தேர்வு கடந்த 3ம் தேதி அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் இருபிரிவாக நடைபெற்றது.

இந்தியாவில் 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் நடைபெற்ற தேர்வில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் 7 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 1,796 பேர் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜிப்மரின் www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில், அகில இந்திய அளவில் அன்கதல அனிருத பாபு (99.9987) முதலிடமும், அகில் தம்பி (99.9986) 2ம் இடமும், ப்ரேராக் திரிபாதி (99.9975) 3ம் இடமும், அமிதாப் பங்கஜ் சவுகான் (99.9973) 4ம் இடத்தை பிடித்துள்ளனர்.

கீர்த்தனா 99.996 மதிப்பெண்

மருத்துவ படிப்பிற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வில் தேசிய அளவில் 12ம் இடமும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்த கீர்த்தனா, ஜிப்மர் நுழைவு தேர்வில் 99.996 சதவீத மதிப்பெண்களுடன் 5ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இதேபோல் புதுச்சேரி பொதுப்பிரிவில் அக்‌ஷய் (99.7083), விக்னேஷ் ராமன் (99.560), ரக்‌ஷா (98.877), சரவணன் (98.603) ஹர்ஷிதா (98.524) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜுலை 4ம் தேதியிலிருந்து துவங்கவுள்ளது

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...