Tuesday, June 5, 2018

மாநில செய்திகள்

நீட் தேர்வு முடிவு: முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி





நீட் தேர்வு முடிவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார். #NeetExam

ஜூன் 04, 2018, 04:53 PM

மே 6-ல் நடந்த நீட் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். தமிழகத்தில் 1,14,602 மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் தேர்வு முடிவு 12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ,தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 45336 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 39.55 சதவீதம் ஆகும் .தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 12 வது இடம் பிடித்து உள்ளார்.

தமிழில் தேர்வு எழுதிய 24,720 பேரில் 1.86 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் நீட் தேர்வில் அதிகம் தேர்வு அடைந்து உள்ளனர். 76,778 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

வெளிநாடு வாழ் மாணவர்களில் 1200 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

நீட் தேர்வு முடிவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடம் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித்துக்கு கிடைத்துள்ளது. அவர் எடுத்த மதிப்பெண்கள் 690.
அதே போல டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷூ ஷர்மா 690 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

முதல் 50 இடங்கள் பெரும்பாலானவை வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த 7,314 மாணவர்கள் வேறு மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதி உள்ளது தெரியவந்துள்ளது

இந்தியா முழுவதும் தேர்ச்சி விகிதம் 53.85 ஆக உள்ளது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 7,14,563 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தகுதி மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். இதில் பொதுப்பிரிவினர் 119 கட் -ஆஃப் மதிப்பெண்ணையும், மற்ற பிரிவினர் 96 கட்-ஆஃப் மதிப்பெண்ணை பெற்றிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024