Tuesday, June 5, 2018

மாவட்ட செய்திகள்

சேலத்தில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை




சேலத்தில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு குடியிருந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஜூன் 04, 2018, 04:55 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலை வேளையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாநகரில் நேற்று மாலை 4 மணியளவில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இடியுடன் பலத்தமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக ஆங்காங்கே உள்ள கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையம், கிச்சிபாளையம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, களரம்பட்டி, அழகாபுரம், மணக்காடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு பாதிப்பு ஏதும் இல்லை. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

பெரமனூர் நாராயணன் தெரு 20 அடி ரோடு, கோவிந்தகவுண்டர் தோட்டம், மணக்காடு ராஜகணபதி நகர், களரம்பட்டி, மேயர் நகரில் 5-வது தெரு உள்ளிட்ட பகுதியில் மழை நீர் சாக்கடை கழிவுநீருடன் கலந்து தெருவில் ஆறாக ஓடியது. பெரும்பாலான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால் நடைபயிற்சிக்கு வந்தவர்கள், பயிற்சியில் ஈடுபடமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரமனூர் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு பின் தங்களது வாகனங்களை மெதுவாக ஓட்டி சென்றனர்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...