Wednesday, June 6, 2018

ரயில் பயணியர் எடுத்து செல்லும் பொருட்களுக்கு எடை கட்டுப்பாடு?

Added : ஜூன் 05, 2018 22:35


புதுடில்லி: விமானத்தை போல, ரயில்களில் செல்லும் பயணியர், எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக எடுத்துச் செல்வோரிடம், கட்டணம் வசூலிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ரயில்களில் பயணம் செய்வோர், தங்களுடன், அதிக எடையில் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். இதனால், பெட்டிகளில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்க்க, பயணியர் எடுத்து வரும் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜூன், 8 - 22 வரை, அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.இந்த பிரசாரத்தில், வகுப்பு வாரியாக, முன்பதிவு டிக்கெட்டில் செல்லும் பயணியர், தங்களுடன் எடுத்துச் செல்லும் பொருட்களின் எடை குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லும் பயணி, 70 கிலோ பொருட்கள் எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் செல்லும் பயணி, 50 கிலோ பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் பயணிப்போர், 50 கிலோ, துாங்கும் வசதியுடைய, முன்பதிவு பெட்டியில் பயணிப்போர், 40 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லலாம்.முன்பதிவில்லாத, பொது பெட்டியில் செல்வோர், 35 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.சோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, பொருட்களின் எடை அதிகமாக இருந்தால், 'பார்சல்' கட்டணத்தை போல், ஆறு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படஉள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024