Wednesday, June 6, 2018

கவுன்சிலிங்கில் குழப்பம் : டாக்டர்கள் போராட்டம்

Added : ஜூன் 06, 2018 00:53

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான, பணியிட கவுன்சிலிங்கில் குளறுபடி நடந்துள்ளதாக, அதிகாரிகளுடன் டாக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவம் படித்தவர்கள், குறிப்பிட்ட காலம், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். இதற்கான கவுன்சிலிங், சென்னையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில் நேற்று துவங்கியது. கவுன்சிலிங் துவங்கிய சில நிமிடங்களில், 'காலியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளன; கவுன்சிலிங்கில் வெளிப்படை தன்மையில்லை' எனக்கூறி, அதிகாரிகளுடன், டாக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.பின், மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ பேச்சு நடத்தி, பணி மூப்பு அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறும் என, வாக்குறுதி அளித்த பின், மாலையில், மீண்டும் கவுன்சிலிங் துவங்கியது.

இது குறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'அரசு டாக்டர்களை காட்டிலும், அரசு சாரா டாக்டர்களுக்கு அதிக முன்னுரிமை தரப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படவில்லை. பல இடங்கள், முன்னதாகவே நிரப்பப்பட்டுள்ளன' என்றனர்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...