அரசு பஸ் ஊழியர் சங்கங்கள் மீண்டும், 'ஸ்டிரைக் நோட்டீஸ்'
Added : ஜூன் 05, 2018 21:20
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், 'ஸ்டிரைக் நோட்டீஸ்' வழங்கி உள்ளன.தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., உள்ளிட்ட, 10 தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னை, பல்லவன் இல்லத்தில் நடந்தது.
பின், நிர்வாகிகள் கூறியதாவது:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், 8,000 வழித்தடங்களில், லாப நோக்கமற்று, பஸ்களை இயக்குகின்றன. இதனால், மாநகரம், நகரம், கிராமம் மற்றும் மலை வழித்தடங்களில், போக்குவரத்து எளிதாகி உள்ளது.
நிலுவை : இதனால் ஏற்படும் நஷ்டத்தை, அரசு ஏற்க வேண்டும் என்ற, கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கு பதில் அரசு, பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அத்துடன், டீசல் மானியத்தையும் நிறுத்தியது. கட்டண உயர்வுக்கு முன், 2.40 கோடியாக இருந்த பயணியர் எண்ணிக்கை, தற்போது, 1.50 கோடியாக குறைந்துள்ளது. ஏற்கனவே, ஒரு நாளைக்கு, எட்டு கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், தற்போது, ஒன்பது கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கட்டண உயர்வுக்குப் பின், டீசல் விலை, லிட்டருக்கு, ஐந்து ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது.இது போன்ற செலவுகளால் ஏற்படும் நிதிச் சுமையை சமாளிக்க, நிர்வாகம், ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பணத்தை செலவு செய்கிறது. அதனால், ஊழியர்களுக்கு தர வேண்டிய நிலுவை, தற்போது, 6,000 கோடி ரூபாயாகி உள்ளது.போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த முரண்பாடுகளை நீக்கி, நிலுவை தொகையை, உடனே வழங்க வேண்டும்.பணி ஓய்வுபெறுவோருக்கு, அப்போதே பணப் பலன்களை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை, மத்திய, மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும்.வேலை நிறுத்தம்இந்த கோரிக்கைகளை, அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், வரும், 19ம் தேதியோ அல்லது அதன் பிறகோ, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்.இதற்கான, ஸ்டிரைக் நோட்டீசை, போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், செயலர் மற்றும் தொழிலாளர் நல கமிஷனர் ஆகியோருக்கு வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment