வெயில் தாக்கம் சென்னையில் குறையும்!
Added : ஜூன் 11, 2018 23:10
சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், இன்று நண்பகல் வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று, வெயிலில் தாக்கம் குறையும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.அரபிக்கடலை ஒட்டிய, மேற்கு மாநிலங்களான, கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவிலும், வடகிழக்கு மாநிலங்களான, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திலும், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், கோவை சின்னக்கல்லாரில், அதிகபட்சமாக, 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. பெரியார், வால்பாறை, பாபநாசம், 12; நடுவட்டம், 10; தேவாலா, 7; பேச்சிப்பாறை, செங்கோட்டை, 4; தென்காசி, குழித்துறை, மயிலாடி, 2 செ.மீ., மழை பெய்துள்ளது.இன்றைய நிலவரம் குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியிலும், கேரளாவை ஒட்டிய பகுதிகளிலும், இன்று பிற்பகல் வரை, கனமழை பெய்யும்.சென்னையை பொறுத்த வரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெயிலின் தாக்கம், முந்தைய நாட்களை விட குறைந்து, அதிகபட்சம், 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும். சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:
Post a Comment