Tuesday, June 12, 2018

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்க ஆர்வம் : ஒரே நாளில், 17 ஆயிரத்து, 500 விண்ணப்பம் வினியோகம்

Added : ஜூன் 12, 2018 00:06

சென்னை, ஜூன் 12-எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, விண்ணப்பம் வினியோகம் நேற்று துவங்கியது. வினியோகம் துவங்கிய ஒரே நாளில், 17 ஆயிரத்து, 598 மாணவர்கள், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 5,774 இடங்கள் உள்ளன.இவற்றுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதன்படி, நடப்பாண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான விண்ணப்பம் வினியோகம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளில், நேற்று துவங்கியது.

அரசு ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பம், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு இலவசமாகவும், இதர வகுப்பினருக்கு, 500 ரூபாய் கட்டணத்துடனும் வினியோகிக்கப்படுகிறது.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, அனைத்து வகுப்பினருக்கும், 1,000 ரூபாய் கட்டணத்தில் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது.விண்ணப்ப வினியோகம் துவங்கிய ஒரே நாளில், அரசு இடங்களுக்கு, 11 ஆயிரத்து, 967; தனியார் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 5,631 விண்ணப்பங்கள் என, 17 ஆயிரத்து, 598 மாணவர்கள், விண்ணப்பங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றுள்ளனர்.விண்ணப்பங்களை, வரும், 18ம் தேதி மாலை, 5:00 மணி வரை, அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் www.tnmedicalselection.org, www.tnhealth.org என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 18ம் தேதிக்குள், 'மாணவர் சேர்க்கை செயலர், மருத்துவ கல்வி இயக்ககம், ஈ.வெ.ரா., சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் வழியாக அனுப்பலாம் அல்லது நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

தரவரிசை பட்டியல், வரும், 28ல், வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, முதற்கட்ட கவுன்சிலிங்கை, ஜூலை, 1; இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை, ஜூலை, 16ல் நடத்த, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது.கே.எம்.சி.,யில் சிறப்பு வசதிசென்னையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், மாணவர்கள், டி.டி., எடுக்க வசதியாக, வங்கியில் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு, 2,905 விண்ணப்பங்கள் வினியோகம் நடந்துள்ளது. எம்.எம்.சி., கீழ்ப்பாக்கம், ஓமந்துாரார், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,385 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024