Saturday, June 9, 2018

டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: ரூ.3 கோடி இழப்பு

Added : ஜூன் 09, 2018 04:37



சேலம் : சேலம் அருகே, துணைமின் நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி, 30 அடி உயரத்துக்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. 28 ஆயிரம் லிட்டர் ஆயில் நாசமானதால், வாரியத்துக்கு, மூன்று கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே, கே.ஆர்.தோப்பூரில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, கருப்பூர், அஸ்தம்பட்டி, தும்பிப்பாடி உள்ளிட்ட, 110 கிலோவாட் மற்றும் 230 கிலோவாட் திறன் கொண்ட, 10க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்களுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகின்றன.

கடந்த, 25ல், இடி, மின்னல் ஏற்பட்டதில், துணை மின் நிலையத்தில் இருந்த, 66.67 எம்.வி.ஏ., என்ற 'மெகா வோல்ட் ஆம்பீர்' என்ற திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் கடும் சத்தத்துடன் வெடித்து, ஆயில் சிதறியது. இதனால், பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டு, நள்ளிரவுக்கு பிறகே, மாற்றுப்பாதை மூலம், மின் வினியோகம் சீரானது.

சேதமான டிரான்ஸ்பார்மருக்கு மாற்றாக, அதே திறன் கொண்ட, 66.67 எம்.வி.ஏ. டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி, நேற்று நடந்தது. அப்போது, அதிக அழுத்தம் ஏற்பட்டு, காலை, 8:45 மணிக்கு டிரான்ஸ்பார்மர் மீதிருந்த இன்ஸ்லேட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், உள்ளே இருந்த, 28 ஆயிரம் லிட்டர் ஆயில், தீப்பற்றி கொண்டது. அதில், 50 அடி உயரத்துக்கு, கரும்புகை கக்கி, 30 அடி உயரத்தில், தீ ஜூவாலை கொளுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி, புகை மண்டலமாக மாறியது.

ஓமலுார், இரும்பாலை, சூரமங்கலத்தில் இருந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள், ரசாயன நுரை கலவை கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து, 9:30 மணிக்கு, தீயை அணைத்தனர். தொடர்ந்து, ஒரு மணி நேரம் போராடி, டிரான்ஸ்பார்மர் வெப்பத்தை முழுமையாக தணித்தனர். தீயில் நாசமான ஆயில் மதிப்பு, 19.6 லட்சம் ரூபாய். அதோடு, சேர்ந்து டிரான்ஸ்பார்மர் சேதமதிப்பு மூன்று கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...