Tuesday, June 5, 2018


நெட்டிசன் நோட்ஸ்: இளையராஜா - இது வெறும் பெயரல்ல; இரு தலைமுறையின் மூச்சு

Published : 02 Jun 2018 15:11 IST


தொகுப்பு: இந்து குணசேகர்

 


இளையராஜா | கோப்புப் படம்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதுகுறித்து இளையராஜாவின் ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்கள் வாழ்த்தைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் விவரம்... இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

vishal

பணிச்சுமையில் போட வேண்டாம் என்று சுழ்நிலை கூறினாலும் இதயம் கேட்க மறுக்கின்றது தென்றல் வந்து தீண்டியது உண்மையில் மேஸ்ட்ரோவின் இசையில் இளையராஜா #HBDIlayaraja

K.R.Venkadesh

‏#HBDIlayaraja இசை என்னும் கலையின் வாயிலாக மக்கள் மனதை வென்ற இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Guruparan

‏#HBDIlayaraja அழவைக்கும் ... ஆர்ப்பரிக்கும் ... ஆறுதல் தரும் ... உள்ளே புகுந்து மனிதம் தொடும் .. இசைக்கு ... பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கிரியேட்டிவ் ЯΛJ ™

‏காதல் பெருகியதற்கும் தற்கொலைகள் குறைந்ததற்கும் இசைஞானியும் ஒரு காரணம்தான்! இசை வாழ்க பல்லாண்டு!
https://twitter.com/UnimaginableBad/status/1002777154323484673

கோ.ஸ்ரீதரன்

தினம் இரவு நான் எவ்வூரிலிருந்தாலும் என் அம்மாவை என்னிடம் கொண்டு வந்துவிடும் வேலை ராஜாவுடையது ...!

வேதாளம்

உணர்வுகளைத் திரை வடிவிலும் இசை வடிவிலும் நம்மிடம் கடத்த இவர்களை மிஞ்ச யாரும் இங்கு இல்லை

வாலி

யுத்த காலத்தில் (யாழ்ப்பாணத்தில்) என் பதின்ம வயதுக் காலத்தில் எங்களுக்கு உயிரூட்டியது #ராஜா_இசை இல்லையேல் நாங்கள் அப்போதே தன்னம்பிக்கையை இழந்து இருப்போம்

யாத்ரீகன்

‏இளையராஜா பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு.

ஆனா அதைவிட கேட்கிறதுக்கு

நிறைய இருக்கு.

νєттιιѕм

‏சொற்களால் சிலவற்றை விவரிக்கவோ/வெளிப்படுத்தவோ இயலாது. அதுவே ராஜா எனைப் பொறுத்தமட்டில் :)

உன் இசை வாழி.

துரோனா ©

‏கற்பனா சக்தியின் உச்சம்தான் இளையராஜா. மனதில் யோசிக்கும் இசை வடிவங்கள் அடுத்த வினாடிகளில் இசைக் குறிப்புகளாய் வந்துவிழும். இதற்குக் காரணம் தாம் விரும்பியவாறே வளைந்து கொடுக்கும் ராகங்கள்தான்.

$мιℓєу Saravana

‏இசைஞானி வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமையை விடவா இசையை ரசிப்பவர்களுக்கு இருந்து விடப் போகிறது

Dark Knight

‏புதுராகம் படைப்பதாலே நீயும் இறைவனே!

கா(லா)க்கொடுமை!!

‏வருடங்கள் மெல்லச் சாக அணுவளவும் குறையாத அன்னை அன்பைப்போல் உன் தாலாட்டு..

ச ப் பா ணி

‏BGM கேட்டாலே சீன் என்னன்னு சொல்லக்கூடிய படங்கள் இதயம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மெளனராகம், புதுப்புதுஅர்த்தங்கள், சின்ன கவுண்டர்

தஞ்சை தர்மா

‏"இளையராஜா" இது வெறும் பெயர் மட்டுமல்ல

இரு தலைமுறையின் மூச்சுக் காற்று

abisheik Raj

‏நாம மறந்தாலும் பிரைவேட் பஸ்கள் இளையராஜாவை தினமும் கொண்டாடிக் கொண்டே தான் இருக்கின்றன...!!!

Bala Chakravarthi



இதன் உச்சியில்...

ஒரு கோப்பை தேநீர்...

ஒரு நூறு ராஜா பாடல்கள்...

ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர்...

போதும்..!

ஆக்டோபஸ்

‏நீங்கள் இசையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகத்தில் உங்கள் இசையைக் கேட்டு லயிக்கும் வரம் பெற்றோம்...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

Being Human®

‏ராஜாவின் சிறந்த பாடல்கள் இரண்டு அல்லது மூன்றின் இணைப்பை எடுத்துப் பதிவிடலாம் என ஒருமணிநேரம் உன்குழலில் தேடிப்பார்த்தாகி விட்டது.வெகுநேரத்திற்குப் பிறகு ஒரு உண்மை புரிந்தது.

அது சாத்தியமில்லை.!

முகிலன்™

‏காற்றில் இசையை கலப்படம் செய்தவர்களில் இளையராஜாவிற்கு பெரும்பங்கு உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.,!

Prasanth

தனிமையான பேருந்து நேரப் பயணங்களிலும், தனிமையான இரவுகளிலும் நம்முடன் துணையாய் இருக்கும் ராஜா சார்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அருண்காந்த் ✨™

‏செல்போன் எந்ந கம்பெனியா, மாடலா இருந்தாலும் ராஜா பாட்டு இல்லாத

ஒரு செல்போனையும் தமிழ்நாட்டுல பாக்க முடியாது

படைப்பாளிக்குக் கர்வம் என்று சொல்பவர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்.அவன் உங்கள் புறக்கணிப்பை எல்லாம் மிதித்து முன்னேறியவன். #HBDRajaSir

திரு

‏என் இரவை அழகாக்கும் இறைவனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் #HBDRajaSir

writer settu

‏ராஜாவின் இசை என்பது இந்த உலகத்தின் நாம் எந்த ஓரத்தில் இருந்தாலும் நம்மை அவர் வாழும் உலகத்திற்கும் நம்மை சார்ந்த உலகத்திற்கும் அழைத்துச் செல்வார் !

குழந்தை அருண்

‏மழை..

நீ..

நான்..

காபி..

ராஜா சார்..

ஆல்டைம் பர்ஃபெக்ட் காம்போ..

சூர்(ப்)பனகை

‏பயணங்களில் மொபைல் சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் ராஜா சார் பாட்டு மட்டும் காதில் தானா ஒலிச்சிக்கிட்டே இருக்கும்...!

Pradeep

‏வாழ்த்த வயதுமில்லை வார்த்தைகளுமில்லை

அச்சச்சோ...!

‏காலை எழுந்ததும் இளையராஜா பாட்டு.... தூங்கும்போதும் இளையராஜா பாடல்... ஆபிஸ் ல வேலை பார்க்குறப்பவும் இளையராஜா பாடல்... வேறென்ன வேண்டும் #HBDRAJASIR இந்த வாழ்விற்கு

பொம்மையா முருகன்

‏நம் வாழ்க்கையின் ரீவைண்ட் பட்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... #HBDRajaSir

Dr. Sarankumar MD

‏சாகாவரம் பெற்றுவிட்டப் பெருமிதத்தில் புன்னகை பூக்கிறது உன் ஹார்மோனியம் நுழைந்து வெளிவந்த காற்று!

லதா கார்த்திகேசு

‏#காற்று உள்ளவரை

#இசை இருக்கும்

#மூச்சு_காற்று உள்ளவரை

#ராஜா_இசை இருக்கும் #HBDRAJASIR

ஒரு தல இராவணன்

‏மழைக்கால பேருந்து பயணங்களில் ஜன்னலோர இருக்கை ராஜா பாட்டு!

சொர்க்கம்

உழவர் மகன்

‏கோட்டை இல்லை, கொடியும் இல்லை அ(எ)ப்பவும் தான்

கவிதா சொர்ணவல்லி

தடுமாறிய அத்தனை தருணங்களிலும் கைநீட்டி அழைத்து சென்றிருக்கிறீர்கள் ஒரு வழிகாட்டி நட்சத்திரத்தைப் போல.

அழுதழுது அயர்சியுற்ற நாட்களிலெல்லாம், பேரன்புடன் அரவணைத்திருக்கிறீர்கள் ஒரு மழையைப்போல .

திக்குதெரியாமல் விக்கித்து போன பொழுதுகளிலெல்லாம் ஆவேசமாக உங்களிடம சரணடையும் நேரத்தில், பெருங்கனிவுடன் தலை தடவி விட்டிருக்கிறீர்கள் மென்பனி ஒன்றைப் போல.

முதல் வெட்கத்தில், முதல் காதலில், முதல் முத்தத்தில், முதல் அரவணைப்பில், முதல் அழுகையில்... நீங்கள் இல்லாமல் கடந்த "முதல்" எது மிச்சம் இருக்கிறது இந்த வாழ்வில்??

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் உடனிருந்திருகிறீர்கள் ராஜா, கண்டுகொள்ளப் படாவிடினும், தன் பணி செய்யும் நிலவைப்போல.

உறைந்து போன, கடக்க முடியாத இக்காலக்கட்டதை நான் உங்களின் கை பிடித்தே கடக்கிறேன் ராஜா. ஒரு எகிப்திய myth போல நீங்கள் என் வாழ்வில். உங்களைப் பின் தொடரும், உங்களின் மீது பெரு மையல் கொண்ட சிறு பெண் போல நான்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும், நீங்கள் இசைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்னருகில் அமர்ந்து. என்னையறியாமல் வடிந்தோடும் சில துளி கண்ணீருடன், உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். உணர்வு மேலெழுச்சியில் "நீங்கள் என் கடவுள் அல்லவா" என்றும் எழுதத் தோன்றுகிறது.

எதுவாகினும் நீங்கள் இல்லாமல் இவ்வாழ்வு இல்லை ராஜா. இப்பிறவி பெருங்கடலை கடக்க உதவி செய்யும் பெரும் படகோட்டி நீங்கள். உங்கள் பின் பயணிக்கும் சிறு மீன் நான்.

இன்னம் இன்னமும் பல நூறு ஆண்டுகள் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ராஜா. என் போன்ற தத்தளிக்கும் மனதுகளுக்காக. இத்தருணத்தின் உங்களை அணைத்துக் கொள்கிறேன் ராஜா. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Narasimahan Ramakrishnan

இளையராஜா ரசிகர்களை பட்டியல் போட்டால் என்னை பின்வரிசையில் தான் சேர்த்துக்கொள்வேன். அவரது இசையை கேட்டு ரசிக்கும் தீவிரத்தின் அடிப்படையில் அல்ல, அவரது இசை நுட்பங்களை ரசிக்கும் திறனின் நுட்பன்களின் அடிப்படையில். அவரது இசைப்பற்றி அதி தீவிர ரசிகர்கள் எழுதுவதையும், பேசுவதையும் கேட்கும் போது எப்படி எல்லாம் ரசிக்கின்றனர் என்று வியக்கவே தோன்றுகிறது. ராஜாவை ரசிக்க இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

Mani Mkmani

ஒரு பாட்டில் இவன் வைக்காத ரகளை இல்லை. அறிந்ததில் யாவரையும் விட பெரும் கலகக்காரன். இவனைக் கேட்கும் தருணங்களில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது திடுக்கிடுகிறது.

Kuppuswamy Ganesan

இளையராஜாவின் அத்தனை ஆயிரம் அற்புதங்களில் ஒரேயொரு பாடலை மட்டும் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலைச் சொல்வோம்.

எனக்கு இது. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் உறவெனும் பாடல்.

அன்றும்

இன்றும்

என்றும்.

Joseph Anto

வாழ்க்கைல கொண்டாட்டமான நாட்கள் இரண்டே இரண்டு தான்.

1. சம்பளம் வர்ற நாள்.

2. இளையராஜா பொறந்த நாள்.

#HappyBirthdayIlaiyaraaja

Jeyaseelan Jey

காதல்,கோபம்,சோகம்,மகிழ்ச்சி,தனிமை,விழாக்கள்,ஆர்க்கெஸ்ட்ரா,இழப்பு,வருகை,வாழ்த்து என வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் ராஜாவின் இசை இல்லாமல் நிறைவடைவதில்லை நம் தமிழ்ச்சமூகத்திற்கு... அந்த இசைக்கு இன்று பிறந்த நாள்...

வாழ்த்துகள் #ராஜா..எப்போதும் வாழ்க உங்கள் இசை போல...


Post Comment View Comments

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024