அரசு ஊழியர்கள் வருமான வரி கட்டுவதில்லை:-வருமான வரி ஆணையர் சுற்றறிக்கை!
சென்னையில் உள்ள 50 சதவிகித அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை என அரசு அலுவலகங்களுக்கு வருமான வரி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை என்பதை வருமான வரி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத ஒவ்வொருவருக்கும், தாமதக் கட்டணம் வசூலிக்கும் வகையில், வருமானவரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மாத வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்கள், ஜூலை 31க்கு முன், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகை, வட்டி வருவாய் உட்பட, அனைத்து வருவாய்களையும் வருமான வரி கணக்கு தாக்கலில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதில் ஏதேனும் விடுபட்டது தெரியவந்தால், அதற்குத் தனி அபராதம் விதிக்கப்படும்.
கால வரம்பை மீறுபவர்களுக்கு, தாமதக் கட்டணமாக, 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். மேலும், அவர்களுக்கு மூன்று மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment