இந்தியர்களுக்கு பயணவழி விசா தேவையில்லை: பிரான்ஸ்
By DIN | Published on : 28th July 2018 01:51 AM |
பிரான்ஸ் நாட்டைக் கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள், இனி விமான நிலைய பயணவழி விசா வைத்திருக்கத் தேவையில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே ஜிக்லர் தனது சுட்டுரைப் பதிவில், இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் ஜூலை 23, 2018 முதல், பிரான்ஸில் உள்ள சர்வதேசவ விமான நிலையங்களைக் கடந்து வெளிநாடு செல்லும் பட்சத்தில் விமான நிலைய பயணவழி விசா (ஏடிவி) வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பிரான்ஸ் நாடு வழியாக இதர வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், அந்நாட்டு விமான நிலையத்தில் இறங்கி வேறு இணைப்பு விமானங்களில் செல்வதற்கு பயணவழி விசா பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment