Saturday, June 1, 2019


ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம்

Added : ஜூன் 01, 2019 06:00

துாத்துக்குடி : 'ஹெல்மெட்' அணிந்து, டூவீலர்களில் வருவோருக்கு, இலவசமாக, 1 லிட்டர் பெட்ரோல் வழங்கும் திட்டம், திருச்செந்துாரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுற்றுவட்டார பகுதிகளில், விபத்துகளை குறைக்கும் முயற்சியாக, திருச்செந்துார், சப் - டிவிஷனில், போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, 'ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற புதிய திட்டத்தை, இன்று முதல் அமல்படுத்தியுள்ளனர். மேலும், ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில், இலவச பெட்ரோல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்துார், டி.எஸ்.பி., பாரத் கூறுகையில், ''ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற புதிய திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, மாதத்தில் ஒரு நாள், மகிழ்ச்சி நேரம் என அறிவித்து, காலை, 9:00 முதல் பகல், 12:00 மணி வரை, முதலில் வரும், 30 வாடிக்கையாளர்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்,''என்றார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024