Friday, June 7, 2019

மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பாளர் மருத்துவ அலுவலர் பணிக்கு தனி அந்தஸ்து தமிழக சுகாதாரத்துறை திட்டம்

Added : ஜூன் 07, 2019 02:43

சிவகங்கை:அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் துணை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ (ஆர்.எம்.ஓ.,) அலுவலர் பணியிடங்களை நிர்வாக நலன் கருதி இப்பணியிடங்களுக்கு தனி அந்தஸ்து வழங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் துணை முதல்வர், கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர் பணியிடங்களில், துறை பேராசிரியர், சிறப்பு பிரிவு டாக்டர்கள் பதிவு மூப்பின் அடிப்படையில் கூடுதல் பணியிடமாக நியமிக்கப்பட்டனர். இதனால் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது, நிர்வாக ரீதியிலான பிரச்னைகளை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதை தவிர்க்க சீனியர் டாக்டர்கள், பேராசிரியர்களிடம் நிர்வாக பணியில் மட்டுமே ஈடுபட கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலருக்கு விருப்பத்தை சுகாதாரத்துறை கேட்டு வருகிறது.கவுன்சிலிங்கிற்கு பின் நியமனம் மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறியதாவது: நிர்வாகம், கல்வி ஆகிய இரண்டிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.
இதற்காக நிர்வாக பணியில் மட்டுமே துணை முதல்வர், கண்காணிப்பாளர், மருத்துவ அலுவலர்கள் ஈடுபடவேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அறிவுரை வழங்கியுள்ளது. இதன்படி கல்லுாரி துணை முதல்வர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. டாக்டர்களுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்ததும், நிர்வாக ரீதியாக மட்டுமே செயல்பட கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர்களை அரசு நியமிக்கும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024