Monday, June 10, 2019

சிலைகளில் சில்மிஷம் 'காமுக' வாலிபன் கைது

Added : ஜூன் 09, 2019 23:42

திருச்சி: தஞ்சை பெரிய கோவிலில், சுவாமி சிலைகளை கட்டிப் பிடித்து, ஆபாசமாக, 'போஸ்' கொடுத்த வாலிபனை, போலீசார் கைது செய்தனர்.தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள பழமையான சுவாமி சிலைகளை, ஆபாசமாக கட்டிப் பிடித்தபடி, 'போஸ்' கொடுத்த வாலிபன் படம், சில நாட்களாக, சமூக வலைதளங்களில் பரவியது.ஆத்திரம்அதை பார்த்தவர்கள், முகம் சுளித்ததுடன், வாலிபன் மீது ஆத்திரம் அடைந்தனர். திருச்சி, கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரத்தினவேலு என்பவர், 'வாலிபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தார்.அமல்ராஜ் தலைமையிலான போலீசார், 'வாட்ஸ் ஆப்'பில் படங்கள் வெளியான மொபைல் எண்ணை வைத்து விசாரணைநடத்தினர். அதில், மதுரை, ஒத்தகடையைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், 22, என்பதும், தஞ்சை பெரிய கோவிலுக்குசுற்றுலா வந்தபோது, எடுத்த படங்கள் என்பதும் தெரிந்தது.வழக்குப்பதிவுமேலும், அவன், திருச்சியில், செங்குளம் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிந்தது.இதையடுத்து, அவன் மீது, பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டது, அதை சமூக வலைதளங்களில் பரப்பியது ஆகிய பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து, முஜிபுர் ரகுமானை, நேற்று கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...