தமிழக அரசு சார்ந்த நிறுவனமான ‘ஆவின்’ மூலம் வினியோகிக்கப்படும் பால் விலை நவம்பர் 1–ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த விலை உயர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்திவிட்டு, விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பால் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. திங்கட்கிழமை போராட்டம் நடத்த இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் போன்றவை பால் விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்தியுள்ளன. ஆனால் அரசு அறிவித்தபடி பால் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. பால் விலை உயர்வால் ஓட்டல்கள், டீக்கடைகளில் டீ, காபி விலையும் உயரும் என்று கருதப்படுகிறது. பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளும் விலை உயரக்கூடும்.
--–
பிட் பார்ஆல்
No comments:
Post a Comment