Friday, December 5, 2014

தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடக்கம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 19-ல் தொடங்குகிறது

exam time table for plus two and plus one

பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 125 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளும் எழுதுகிறார்கள்.

இந்த தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.

இதன்படி, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 5-ந்தேதி தொடங்கி, மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 19-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது.

பிளஸ்-2அட்டவணை

பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-

2015-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

6-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

9-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

10-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

13-ந்தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ்.

16-ந்தேதி- வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

18-ந்தேதி- கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.

20-ந்தேதி- அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்.

23-ந்தேதி- வேதியியல், அக்கவுண்டன்சி.

27-ந்தேதி- இயற்பியல், பொருளாதாரம்.

31-ந்தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-

மார்ச் 19-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

24-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

25-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

26-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

30-ந்தேதி- கணிதம்.

ஏப்ரல் 6-ந்தேதி- அறிவியல்.

10-ந்தேதி- சமூக அறிவியல்.

தேர்வு தொடங்கும் நேரம்

பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும்.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் மாணவ- மாணவிகளை புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாளில் இடம்பெறுகிறது. அது மட்டுமில்லாமல், மாணவ- மாணவிகளின் பதிவு எண்களும் அந்த விடைத்தாளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024