Friday, January 9, 2015

ரயில்வே ஸ்டேஷன்களில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகம்



புதுடில்லி:ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து, இனி வீடுகளுக்கு வாடகை சைக்கிள்களில் செல்வதற்கான வசதி, டில்லியில் துவக்கப்பட்டுள்ளது.புகார்:தலைநகர் டில்லியில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், காற்று மாசு அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில்களில் வரும் பயணி கள், அலுவலக ஊழியர்கள், இரவில், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு போதிய போக்கு வரத்து வசதியில்லை என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்த இரண்டு குறைகளையும் தீர்க்கும் வகை யில், டில்லி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை துவக்க, டில்லி, மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, டில்லியில் உள்ள ஒவ்வொரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வளாகங்களிலும், வாடகைக்கு சைக்கிள் தரும் மையங்கள் அமைக்கப்படும். அதேபோல், ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து, குறிப்பிட்ட சில கி.மீ., துாரத்திற்குள் உள்ள, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், சைக்கிள் நிறுத்துவதற்கான கூடங்கள் அமைக்கப்படும்.




அலுவலகங்களுக்கு சென்று விட்டு, ரயில் மூலமாக ஸ்டேஷனுக்கு வந்திறங்கும் அலுவலக ஊழியர்கள், அங்குள்ள வாடகை சைக்கிள் மையத்துக்கு சென்று, தங்களுக்கு தேவையான ஏதாவது ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, அவருக்குடோக்கன் தரப்படும்.

பின், இந்த வாடகை சைக்கிளில் தங்கள் வீட்டுக்கு செல்லும் ஊழியர்கள், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சைக் கிள் கூடங்களுக்கு சென்று, டோக்கனை கொடுத்து, சைக்கிளை விடலாம். பின், அடுத்த நாள் காலையிலும், இதே நடைமுறையை பின்பற்றலாம். இதற்காக, பொதுமக்களிடம் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும்.




விரைவில்...இந்த திட்டம், முதல் முறையாக, தெற்கு டில்லியில் உள்ள சாகெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று துவக்கப்பட்டது. இந்த ஸ்டேஷனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், சைக்கிள்களை நிறுத்துவதற்கான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம், மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024