அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து 3–வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன.
இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது.
மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.
தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசா வழங்கப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு பணிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment