Saturday, April 18, 2015

விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசியா சுற்றுலா: ஐஆர்சிடிசி நடத்துகிறது; மே 19 தொடக்கம்

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பாரத தர்ஷன் சற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி கல்லூரிகளுக்கான கல்வி சுற்றுலா, கார் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

ரயில் மூலம் மட்டுமல்லாது விமானம் மூலமாகவும் சென்னையிலிருந்து பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் கோவா, காஷ்மீர், கேரளம், அந்தமான் மற்றும் ஷீரடி போன்ற இடங்களுக்கான சுற்றுலாத் திட்டங்கள் மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான கோலாலம்பூர், ஸன்வே லகூன், ஹைலாண்ட்ஸ், சந்தோசா தீவு, யுனிவர்சல் ஸ்டூடியோஸ், ஜுராங் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லும் வகையில் புதிய சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 இரவுகள், 7 பகல்கள் கொண்ட இந்த சுற்றுலா மே 19-ம் தேதி தொடங்குகிறது.

இத்திட்டத்தில் விமான டிக்கெட், தங்கும் வசதி, உணவு, சுற்றிப்பார்ப்பதற்கான கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓர் அறையை இருவர் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில் ஒருவருக்கான கட்டணம் ரூ.59,500.

மேலும் தகவல்களுக்கு 9003140680, 9840902918, 9003140714 ஆகிய தொலைபேசி எண்களிலோ www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...