Sunday, April 26, 2015

குவைத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை 8 லட்சம்: வீட்டு வேலை செய்வோர் அதிகம்

குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விவரம்: குவைத்தில் அதிகம் வாழும் வெளிநாட்டினர் என்ற சிறப்பை இந்திய சமூகம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் எகிப்து நாட்டவர் உள்ளனர். குவைத்தில், விசா காலாவதியான பிறகும், சட்டப்புறம்பாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, 25 ஆயிரமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் எவ்வளவு?

செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவில் குவைத் வாழ் இந்தியர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத்தில், இந்தியர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 5 முதல் 6 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது, இங்கு இந்தியாவைச் சேர்ந்த, 6 லட்சம் ஆண்களும், 2 லட்சம் பெண்களும் உள்ளனர். இவர்களில், 2.80 லட்சம் பேர் வீட்டு வேலை செய்கின்றனர். அதில், 1.90 லட்சம் பேர் ஆண்கள்; 90 ஆயிரம் பேர் பெண்கள். வீட்டு வேலை, தோட்ட வேலை, ஓட்டுனர், சமையல், துப்புரவு உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், வீட்டு வேலை செய்வோருக்கு, 2,500 டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்கும் திட்டம் அறிமுகமானது. இதன் காரணமாக, குவைத்தில், வீட்டு வேலை செய்யும் இந்தியர்கள் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான இந்தியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள், கட்டுமானம், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், பட்டய கணக்கு தணிக்கையாளர்களாகவும், ஐ.டி., வல்லுனர்களாகவும் உள்ளனர்.

கல்வி மையங்களில்...:


இவர்களை சார்ந்து, மனைவி, குழந்தைகள் என, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். 42 ஆயிரம் மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட இந்திய கல்வி மையங்களில் படிக்கின்றனர். குவைத்தில், இந்தியருக்கு, பல்கலை., மட்டத்திலான கல்வி வசதி கிடையாது. சென்ற ஆண்டு, குவைத்தில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் கட்டுமான பணிகள் வழங்கப்பட்டன. இதனால், தனியார் துறை நிறுவனங்களில், இந்தியர்களின் பங்களிப்பு, 8 சதவீதம் அதிகரித்தது. இது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குவைத் அரசு மருத்துவமனைகள் மற்றும் தேசிய எண்ணெய் நிறுவனங்களில், 24 ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் செவிலியர்களாகவும், பொறியாளர்களாகவும் உள்ளனர். மிகச் சிறிய அளவில் இந்திய விஞ்ஞானிகளும், குவைத்தில் உள்ளனர். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...