Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகாரத்துறை அமைச்சகத்தின் 8–4–15 தேதியிட்ட ஆணையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களான தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் கேரள அரசின் நோர்க்கா ரூட்ஸ் மற்றும் ஓவர்சீஸ் டெவலப்மெண்ட் அண்ட் எம்ப்ளாய்மெண்ட் பிரமோஷன் கன்சல்ட்டண்ட் ஆகிய அரசு நிறுவனங்கள் மட்டும் செவிலியர்களை ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பக்ரைன், மலேசியா, லிபியா, ஜோர்டான், ஏமன், சூடான், ஆப்கனிஸ்தான்,இந்தோனேசியா, சிரியா, லெபனான், தாய்லாந்து மற்றும் ஈராக் போன்ற 18 நாடுகளுக்கு 30–4–15 முதல் வேலைவாய்ப்பினை அளிக்கலாம் என்று ஆணையிட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் செவிலியர்கள், தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உடனடியாகப் பதிவு செய்து எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் செவிலியர்களுக்கான பதிவு கட்டண விவரத்தை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் விவரங்களுக்கு, 044–22502267/ 22505886/08220634389 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...