சென்னை:அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மே 10க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு, 64 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஏப்., 20ல் முடிந்தது; 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதற்கான நுழைவுத் தேர்வு, மே 3ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த தேர்வு, மே 10 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.'நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment