Tuesday, April 28, 2015

வரதட்சணை பெற்றவரை பாராட்டிய ஊர்மக்கள்!

ன்றைய திருமண சந்தையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து  கொடுக்க, லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சமூக நிர்பந்தம் நிலவுகிறது. தங்களது பொருளாதார சூழலில், அதை நிறைவேற்ற முடியாது என நினைக்கும் பெற்றோர்கள், பெண் சிசுக்கொலை புரியும் அவலம் இந்த நிமிடம் வரை நிகழந்து கொண்டுதான் இருக்கிறது. 

பெண் சிசுக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆண்கள் கூட, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வதில்லை என்பதுதான் கூடுதல் அவலம்.

‘சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புவோர், அதற்கான முயற்சியை முதலில் தங்களிடமிருந்து துவங்க வேண்டும்’ என்ற அடிப்படை சிந்தனை, பெரும்பாலான சமூக ஆர்வலர்களிடம் காணப்படுவதில்லை. 

ஆனால், இதற்கு விதிவிலக்காக தனது திருமணத்தையே சமூக மாற்றத்திற்கான ஆரம்பமாக பயன்படுத்தி இருக்கிறார் அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம் பர்வாலா கிராமத்தைச் சேர்ந்த சுதேந்திரா ஆசாத்.

ஆசிரியரான இவருக்கு, கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் பெண் வீட்டாரிடம் அவர் தனக்கு வரதட்சணை வேண்டும் என கேட்டபோது, பெண் வீட்டார் அதிர்ந்தனர். ஆனால், வரதட்சணையாக அவர் கேட்ட பொருள் என்னவென்று தெரிந்ததும் அவரை உச்சிமுகர்ந்தனர் பெண்வீட்டாரும் அந்த ஊர் மக்களும். ஆமாம், தனது திருமணத்தில் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணையாக அவர் பெற்றது 1,000 மரக்கன்றுகள். 

அதை தனது ஊரிலும், மணமகள் அனிதா ஊரிலும் நடவு செய்து தங்கள் கிராமத்தை பசுமையாக்க முடிவு செய்திருக்கிறார். திருமணத்தின் போது வழக்கமாக ஏழுமுறை அக்னியை வலம் வருவார்கள். ஆனால், இவர், பெண் சிசுக்கொலையை கண்டிக்கும் விதமாக, தனது மனைவியுடன் எட்டாவது முறையாக வலம் வந்தார்.
மாற்றம் என்பது மனிதரிடமிருந்து உருவாவதுதானே.. 

பாராட்டுக்கள் சுதேந்திரா ஆசாத்!

- ஆர்.குமரேசன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024