புதுடில்லி: மொபைல் புரட்சி காரணமாக, பி.எஸ்.என்.எல்., தரைவழி தொலைபேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. நாடு முழுவதும், 2.80 கோடி பேர், பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு வைத்துள்ளனர். உயர்வேக இணையதள இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், தொலைபேசியை பயன்படுத்தாமல், இணையதளத்தை மட்டும் பயன்படுத்துகின்றனர். இன்னும், ஆறு கோடி இணைப்புகள் காலியாக உள்ளன. எனவே, தரைவழி தொலைபேசியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க, இரவு முழுவதும் இலவசமாக பேசும் திட்டத்தை (ப்ரீ டாக் டைம்) பி.எஸ்.என்.எல்., அறிவிக்க உள்ளது. இதன்படி, இரவு, 9:00 மணி முதல், காலை, 7:00 மணி வரை தரைவழி தொலைபேசியில் இருந்து, பி.எஸ்.என்.எல்., அல்லது வேறு நிறுவனங்களைச் சேர்ந்த, தரைவழி தொலைபேசி அல்லது மொபைல் எண்ணுக்கு இலவசமாக பேசலாம். இத்திட்டத்தை மே, 1ம் தேதி முதல் அமல்படுத்த, பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது...
No comments:
Post a Comment