செல்பேசி வாயிலாக சிலிண்டரை பதிவு செய்யும் போது, தெரியாமல் '0'-ஐ அழுத்திவிட்டால், வாடிக்கையாளரின் கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று புரளி கிளம்பியது.
சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, ஐவிஆர்எஸ் முறையில் ஒலிக்கும் குரல், உங்களால் முடிந்தால், கேஸ் மானியத்தை திரும்ப அளித்துவிடுங்கள். அதற்கு '0'-ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சிலிண்டர் பதிவு செய்ய எண் 1 ஐ அழுத்துங்கள் என்று கூறுகிறது.
வாடிக்கையாளர்கள் தவறுதலாக '0'-ஐ அழுத்திவிட்டால் உடனடியாக அவர்களது கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஐஓசி அதிகாரிகள் கூறியதாவது, தெரியாமல் பூஜ்யத்தை அழுத்தினாலே கேஸ் மானியம் ரத்தாகாது. '0'-ஐ அழுத்திய பிறகு அடுத்த கேள்விகள் வரும். அதில் எண் 7 ஐ அழுத்தினால் மட்டுமே கேஸ் மானியம் ரத்தாகும்.
அப்படியே தவறி 7ஐயும் அழுத்திவிட்டாலும் கூட, உடனடியாக சிலிண்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மீண்டும் கேஸ் மானியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றனர்.
No comments:
Post a Comment