Wednesday, July 22, 2015

பட்டமளிப்பு விழாவில் இனி பட்டாடை 'நோ

கல்லுாரி, பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணிகளை பயன்படுத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கைத்தறித் துணி வர்த்தகத்தை அதிகப்படுத்த, புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பட்டமளிப்பு விழாக்களுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு, விலை உயர்ந்த பட்டாடை, சால்வை போர்த்தி, மரியாதை செலுத்தப்படுகிறது. இனி, கைத்தறித் துணிகளையே இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., வழிகாட்டுதலின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எல்லா கல்லுாரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024