Friday, July 10, 2015

தவறான உத்தரவை திருத்திக்கொள்ளும் துணிச்சல் தேவை: உயர் நீதிமன்றம்

தவறுதலாக உத்தரவு பிறப்பித்துவிட்டால், அந்தத் தவறை திருத்திக் கொள்ளும் துணிச்சல் நீதித் துறைக்கு தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு 5-ஆவது ஊதிய குழு அடிப்படையில் தமிழக அரசு சம்பளம் நிர்ணயம் செய்தது. இதுதொடர்பாக ஓட்டுநர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2008-ஆம் ஆண்டு ஓர் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, அந்த ஓட்டுநர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 5,500 வரை சம்பளம் விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து, பிற அரசு துறை ஓட்டுநர்களும், ஓய்வுபெற்ற ஓட்டுனர்களும் தங்களுக்கும் இந்த உத்தரவின்படி பணப் பலன்கள் வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.
அவர்களுக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு பலன்களை வழங்கி வந்தது. இதற்கிடையே அரசுத் துறை ஓட்டுநர்கள் சிலர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன், ஓட்டுநர்களுக்கு ரூ. 4,000 முதல் ரூ. 4,300 மட்டுமே ஊதிய விகிதம் இருக்க வேண்டும் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பலர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், டி.மதிவாணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2008-ஆம் ஆண்டு இதுபோன்ற வழக்கை விசாரித்த நீதிபதி, தவறுதலாக உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக பலர் வழக்கு தொடுத்து ஊதிய பலன்களைப் பெற்றுள்ளனர். இதனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முந்தைய நீதிபதி பிறப்பித்த உத்தரவில் உள்ள தவறைக் கண்டுபிடித்த நீதிபதி ஹரிபரந்தாமன், அதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்துள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை.
தவறுதலாக ஓர் உத்தரவைப் பிறப்பித்து விட்டால், அதை ஏற்றுக் கொண்டு அந்தத் தவறைத் திருத்திக் கொள்ளும் துணிச்சல் நீதிமன்றத்துக்குத் தேவை என்று கூறி, மேல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...