Thursday, July 9, 2015

ருவாண்டாவின் கல்வி அமைச்சரானார் விஐடி முன்னாள் மாணவர்



வேலூர் விஐடி முன்னாள் மாணவர் பாபையாஸ் மலிம்பா முசாபரி (பி.எம்.முசாபரி) ருவாண்டா நாட்டின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தான்சானியா நாட்டின் தாரே இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் வணிகம், மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றவர். இதையடுத்து, இந்தியாவில் இந்தியத் தொழில்நுட்ப மையம் ரூர்க்கியில் நிதி, தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் விஐடியில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து 2009-இல் நிதி மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சிக் கல்வியில் பி.எச்டி பட்டம் பெற்றார்.
இதையடுத்து, அவர் கல்விப்பணியில் ஈடுபட்டு, ருவாண்டா பல்கலைக்கழகத்தின் வணிகம், பொருளியல் கல்லூரி முதல்வராகவும், நிர்வாகம், மனித வள கல்வி இயக்குநராகவும் பணிபுரிந்துவந்தார்.
இந்த நிலையில், பி.எம்.முசாபரியின் திறமையைக் கருத்தில் கொண்டு அவரை ருவாண்டா நாட்டின் கல்வி அமைச்சராக பிரதமர் அனாஸ்டாசே முருகேசி அண்மையில் நியமித்து உத்தரவிட்டார். இதையடுத்து, முசாபுரிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024