Friday, July 10, 2015

என் நட்பு, எனக்கு வேண்டிய பதிவுகள்: ஃபேஸ்புக் புதிய வசதி

ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்குக்குள் நுழையும்போது, உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மற்றும் சிறப்பாக இயங்குபவர்களின் பதிவுகளை முதலில் பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ, அதையே முதலில் பார்க்கும் வசதியை இன்று (வியாழன்) முதல் தொடங்கியிருக்கிறது ஃபேஸ்புக்.

யாருடைய பதிவுகளைத் தவறவிடக் கூடாது அல்லது முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களுடைய புரொஃபைலுக்குச் செல்லுங்கள். அதில் "following" என்று குறிப்பிட்டுள்ள பெட்டியைத் திறந்து "see first" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

இதேபோல், நீங்கள் ஏற்கெனவே விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்களுக்குச் சென்று, 'Liked' என்ற பெட்டியைத் திறந்து "see first" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

இதையடுத்து, ஒவ்வொரு முறை நீங்கள் ஃபேஸ்புக்குக்குள் நுழையும்போதும், உங்கள் விருப்பமான பதிவுகள்தான் உங்களது நியூஸ் ஃபீடில் முதலில் வந்து அணிவகுக்கும்.

இதன் மூலம் தேவையில்லாத தகவல்கள், நெடுநாட்களாக மறந்தே போன நண்பர்களின் பதிவுகள், சலிப்பை ஏற்படுத்தும் செய்திகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் பிடித்த நண்பர்களின் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமுடியும். இது, புது வகையிலான 'களையெடுப்பு' என்றும் நெட்டிசன்களால் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024