புதுடில்லி: 'வெளிநாடு வாழ் இந்தியர்களான, என்.ஆர்.ஐ.,க்களுக்கு விரை வில் ஓட்டுரிமை அளிக்கப்படும். இதற்கான மசோதா, மத்திய அமைச்சரவை குழுவுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உரிமை
வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். 114 நாடுகளில், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது; அதில், 20 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தவை. நம் நாட்டிலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டால், ஒரு கோடி பேர், ஓட்டளிக்கும் உரிமையை பெறுவர்.
இவ்வாறு, அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து, நீதிபதிகள், அருண் மிஷ்ரா, அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு
வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பி.எஸ்.நரசிம்மா கூறியதாவது:
என்.ஆர்.ஐ.,க்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்குவதற்கு மத்திய அரசு விரைவான
நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வரைவு மசோதா தயாராகியுள்ளது. அந்த மசோதா, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒப்புதல்
அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, அதை பார்லி.,யில் நிறைவேற்றி, என்.ஆர்.ஐ.,க்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment