Wednesday, May 16, 2018

எந்தெந்த இணைய தளங்களில் தேர்வு முடிவுகள்?

பிளஸ்2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை
காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.inஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்படவுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, மாவட்ட, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோன்று பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இத்துடன் மாணவர்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

தனித்தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு இதேபோன்று அனுப்பி வைக்கப்படும்.

ஜூனில் சிறப்பு துணைத் தேர்வு

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மே 21 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் மே 21-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் மே 21-ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற அல்லது தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 21 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழை தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு...விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வியாழக்கிழமை (மே 17) முதல் சனிக்கிழமை (மே 19) வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க முடியும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள், இணையதள முகவரி ஆகிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...