Wednesday, May 16, 2018

மறுதேர்வு எழுதும் வாய்ப்பு மனிதாபிமான அடிப்படையிலானது: உயர்நீதிமன்றம்

தோல்வி அடைந்த பாடங்களில் தேர்ச்சி பெற மறு தேர்வு எழுதும் வாய்ப்பை தனக்கான
உரிமையாகக் கோர முடியாது, அது மனிதாபிமான அடிப்படையில் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வாய்ப்புகள் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.மேகநாதன் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பொறியியல் படிப்பை நிறைவு செய்தேன். 3 பாடங்களில் நான் தேர்ச்சி பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டில் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி அடையவில்லை. இந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் 2000- ஆம் ஆண்டுக்குப் பிறகு "அரியர்' வைத்துள்ள மாணவர்கள் மறுதேர்வு எழுத வாய்ப்பு அளித்துள்ளது. ஆகவே, எனக்கும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், எந்த பொறியியல் மாணவருக்கும் 6 ஆண்டுகள் மட்டுமே "அரியர்' பாடங்களை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற அனுமதியளிக்கப்படும். ஆனால், மனுதாரர் 2006-ஆம் ஆண்டு தேர்வு எழுத அனுமதி வழங்கியும் தோல்வி அடைந்துள்ளார்.
தற்போது 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு, கேள்வித் தாள்களும் மாற்றப்பட்டு விட்டது. எனவே மனுதாரர் தனது "அரியர்' பாடங்களை எழுத அனுமதிக்க முடியாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் "அரியர்' பாடங்களில் தேர்ச்சி பெற வாய்ப்பு கோருவதை தனது உரிமையாகக் கோர முடியாது. இந்த வாய்ப்புகள் மனிதாபிமான அடிப்படையில் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன.
எனவே, இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடலாம் என்ற போதிலும் அபராதம் விதிக்கவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...