நான்கு பேருக்கு தேர்வு எழுத அனுமதி மறுத்ததால் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
விகடன்
கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 4 மாணவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அமைந்துள்ளது. இங்கு 250-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடந்தது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கியபோது அதில் நான்கு மாணவர்களுக்குத் தேர்வு எழுத பல்கலைக்கழகம் நுழைவுச்சீட்டு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அந்த மாணவர்களுக்குப் போதுமான வருகைப்பதிவு இல்லை எனப் பல்கலைக்கழகம் சார்பில் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த
4 மாணவர்கள் தங்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த மாணவர்களுக்கு ஆதரவாகப் பிற மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 4 மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் தேர்வு எழுதினர்.

No comments:
Post a Comment