Wednesday, May 16, 2018

தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை 3 -ஆம் நாளாக தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை



பெட்ரோல், டீசல் விலை 3 ஆம் நாளாக தொடர்ந்து உயர்வடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #PetrolPrice #DieselPrice

மே 16, 2018, 06:40 AM

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவ்வப்போது பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில் 13-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

அதாவது, 13-ந்தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆக இருந்தது. ஆனால், 13-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.14-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், 15-ஆம் தேதி நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்ந்து ரூ.77.93 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்ந்து ரூ.70.25 ஆக விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வடைந்துள்ளது வாகன ஒட்டிகளை கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 50 காசுகளும் டீசல் விலை 69 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024