Monday, May 7, 2018

புயல் வீசும்: உள்துறை எச்சரிக்கை

Added : மே 06, 2018 22:43

புதுடில்லி: 'நாடு முழுவதும், 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில், புயல் காற்று வீசும்; இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துஉள்ளது.

ராஜஸ்தான், உ.பி., ம.பி., டில்லி உட்பட வட மாநிலங்களில், சமீபத்தில் வீசிய புழுதிப் புயலில் சிக்கி, 124 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு, புயல், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் தந்த தகவலில் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சூறாவளி காற்று வீசும்; இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில், பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஹரியானா, டில்லி மற்றும், உ.பி.,யின் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்; ராஜஸ்தானில், புழுதிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024