Tuesday, May 15, 2018

முடிந்தது பரோல் :சிறைக்கு சென்றார் லாலு

Added : மே 15, 2018 02:59



ராஞ்சி: பரோல் காலம் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார் லாலு.

பீஹாரில். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத், ஜார்க்கண்ட் தலைநகர், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.லாலுவின் மூத்த மகன், தேஜ் பிரதாபுக்கும் சக எம்.எல்.ஏ. மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பீஹார் தலைநகர் பாட்னாவில், திருமணம் நடந்தது. .

இதில் பங்கேற்பதற்காக, 10 நாள், 'பரோல்' வழங்கும்படி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 11-ம் தேதி மூன்று நாட்கள் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதைஅடுத்து, சிறையிலிருந்து வெளியே வந்த லாலு, பாட்னாவில் உள்ள தன் வீட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில் திருமணம் நடந்ததையடுத்து அவரது பரோல் காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து மீண்டும் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024