Wednesday, May 16, 2018

கோமா'வில் பெண் டாக்டர் சொத்துக்கு பாதுகாவலர் யார் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 16, 2018 00:18


மதுரை: 'கோமா' நிலையில் உள்ள பெண் டாக்டரின் சொத்துக்களுக்கு பாதுகாவலராக கணவர் இருக்கலாம்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் தம்பதி, சில சொத்துக்களை வாங்கினர். உடல்நலக் குறைவால் மனைவி 'கோமா' நிலையை அடைந்தார். கணவர் பராமரித்து வருகிறார். மனைவியின் சில சொத்துக்களை பாராமரிக்க, தன்னை பாதுகாவலராக நியமிக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் கணவர் மனு செய்தார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.மனுதாரர் வழக்கறிஞர், 'மனுதாரர் மனைவி 'கோமா' நிலையில் உள்ளார். எப்போது, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என உறுதியாக கூற முடியாது' என்றார்.

நீதிபதி உத்தரவு: கோமாவில் உள்ளவருக்கு பாதுகாவலரை நியமிக்க சட்டத்தில் வழிவகை இல்லை. இவ்விவகாரத்தில் சிவில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும். மனைவி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதால், இந்நீதிமன்றத்தை மனுதாரர் நாடியுள்ளார். மனைவியின் சில சொத்துக்களை பராமரிக்க, மனுதாரர் பாதுகாவலராக இருக்க அனுமதிக்கப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024