Wednesday, May 23, 2018

மாணவிக்கு பாலியல் கொடுமை : கருவூல அலுவலர் கைது

Added : மே 23, 2018 04:56

சிவகங்கை: சிவகங்கையில் 8ம் வகுப்பு மாணவியை பாலியல் கொடுமை செய்த சார்நிலை கருவூல அலுவலர் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை நகராட்சி காலனியில் வசிக்கும் 13 வயது சிறுமி 8 ம் வகுப்பு படித்து வருகிறார். மருதுபாண்டியர் நகர் குடியிருப்பில் வசிப்பவர், சார்நிலை கருவூல அலுவலர் ராஜ்குமார்,54. இவர் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார்.சிறுமி தனது வளர்ப்பு தந்தை பாண்டியிடம் தெரிவித்துள்ளார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு விசாரிக்க கலெக்டர் லதா உத்தரவிட்டார்.மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணு,34, விசாரித்து மருத்துவ பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்தார்.சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் முத்துக்கண்ணு புகார் செய்தார். அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, தன்னை ராஜ்குமார் கடந்த 6 மாதங்களாக பாலியல் கொடுமைப்படுத்தி வந்ததாக சிறுமி தெரிவித்தார். ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

PhonePe, GPay get 2 years more to cut UPI mkt share

PhonePe, GPay get 2 years more to cut UPI mkt share  NPCI Lifts 10Cr User Cap On WhatsApp Pay  Mayur.Shetty@timesofindia.com 01.01.2025 Mumb...