Thursday, May 24, 2018


சிவகங்கை முதலிடம்; கோட்டை விட்டது விருதுநகர்


Added : மே 24, 2018 04:35

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பத்தாம் வகுப்பு தேர்வில் முதன்முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 127 பள்ளிகளைச் சேர்ந்த 3,926 மாணவர்கள், 4,165 மாணவிகள் என, 8,091 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,844 மாணவர்கள், 4,137 மாணவிகள் என, 7,981 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 97.91 சதவீதம், மாணவிகள் 99.33 சதவீதம், மொத்தம் 98.64 சதவீதம் தேர்ச்சி. தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 148 பள்ளிகளைச் சேர்ந்த 5,469 மாணவர்கள், 5,277 மாணவிகள் என, 10,746 பேர் தேர்வு எழுதினர். இதில் 5,338 மாணவர்கள், 5,236 மாணவிகள் என, 10,574 பேர் தேர்ச்சி பெற்றனர்.மாணவர்கள் 97.60 சதவீதம், மாணவிகள் 99.22 சதவீதம், மொத்தம் 98.40 சதவீதம் தேர்ச்சி. சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் 275 பள்ளிகளைச் சேர்ந்த 9,395 மாணவர்கள், 9,442 மாணவிகள் என, 18,837 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,182 மாணவர்கள், 9,373 மாணவிகள் என, 18,555 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 97.73 சதவீதம், மாணவிகள் 99.27 சதவீதம், மொத்தம் 98.50 சதவீதம் தேர்ச்சி.சிவகங்கை மாவட்டம் சென்ற ஆண்டு 97.02 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8 வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 1.48 சதவீதம் அதிகரித்து முதலிடத்திற்கு முன்னேறியது.முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது:

 முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது பெருமை அளிக்கிறது. இது தலைமைஆசிரியர், ஆசிரியர்களின் பணி மீதான அக்கறையை காட்டுகிறது. அவர்களது முயற்சியை பாராட்டுகிறேன். இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். இனி தரமான கல்வியோடு, வேலைவாய்ப்புக்கும், வாழ்க்கை கல்விக்கும் முக்கியத்துவம் தரப்படும், என்றார்.3ம் இடத்தில் விருதுநகர் விருதுநகர் மாவட்டம் பல ஆண்டுகளாக மாநில முதலிடத்தை பெற்றது. இச்சாதனை பிளஸ் 2 தேர்ச்சியிலும் தொடர்கிறது. ஆனால் இந்த ஆண்டு முதலிடம் கோட்டைவிட்ட விருதுநகர், 98.26 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் கூறுகையில், ''குறைந்த வித்தியாசத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாமல் போனது. ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி குறைந்ததே காரணம். வரும் ஆண்டில் இது சீர் செய்யப்பட்டு, மீண்டும் முதலிடம் நோக்கி நகர்வோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu The Hindu Bureau TIRUNELVELI 03.01.205 The universities in ...