பரட்டை தலையுடன் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகள்! -பெற்றோர் வேதனை
விகடன்
நீட் தேர்வு எழுதவரும் மாணவிகளின் தலையை கோதிவிட்டுக் காண்பிக்க சொன்னதால் மாணவிகள் மதுரையில் பரட்டைதலையுடன் தேர்வு எழுதச் சென்ற சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு 1.30 மணி வரை நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வு அறைக்குச் சென்ற மாணவர்கள் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 13.26 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் உள்ள 170 மையங்களில் மொத்தம் 1,07,288 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் மதுரையில் 20 மையங்களில் 11,800 நபர்களுக்குத் தேர்வு எழுத நுழைவு சீட்டு வழங்கப்பட்டது . கண்காணிப்பாளர்களுக்கு மட்டும் 500 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 6 பறக்கும் படை குழுக்களும், 20 தலைமை அதிகாரிகளும் மதுரை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் தேர்வுக்கு நுழையும் மாணவிகளின் தோடு, வளையல், வாட்ச், ஹேர்பின், ஜடைமாட்டி உள்ளிட்டவற்றை வெளியே வைக்கச் சொல்லி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் தலையை கலைத்தபடி பரட்டைதலையுடன் மாணவிகள் தேர்வு சென்றதாகப் பெற்றோர்கள் வேதனைத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment