குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க
தமிழ்
எல்.ராஜேந்திரன்
அருவி என்றால், என் போன்ற ‘இளசுகளுக்கு’ இப்போதெல்லாம் ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் ஞாபகத்துக்கு வருகிறார். டூர் பார்ட்டிகளுக்கு என்றால் சாய்ஸே இல்லை; குற்றாலம்தான். ‘பப்பரபப்பப்பப்பேங்..’ என்று ‘அருவி’ பட தீம் மியூசிக் பேக்ரவுண்டோடு குற்றாலத்துக்குப் போனால், வெயிலுக்கு எல்லோரும் எண்ணெய்க் குளியல் போட்டு அருவியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது, குண்டாறு.
குண்டாறு என்பது நீர்த்தேக்கம். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதால், நிறையப் பேருக்கு குண்டாறு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இங்கே கூட்டமும் அவ்வளவாகக் கும்மியடிக்க வாய்ப்பில்லை. தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறுக்கு நிறையப் பேருக்கு வழியே தெரியவில்லை. ‘‘இங்க,அணைக்கட்டு ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கோம்’’ என்று சந்தேகத்தோடு தாடையைச் சொறிகிறார்கள். ‘‘செமையா இருக்கும்ணே... தண்ணி எப்பவுமே விழும்! போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க!’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
வெளியூர்க்காரர்கள் என்றால், தென்காசியிலோ குற்றாலத்திலோ ரூம் எடுத்துத் தங்கிவிடுவது பெஸ்ட். தென்காசியில் மட்டும் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். ‘பசிக்கலை; கொஞ்சம் லேட்டா சாப்பிட்டுக்கலாம்’ என்று காலை உணவை ஸ்கிப் பண்ணினால், பன்னும் பட்டர் பிஸ்கட்டும் மட்டும்தான் கிடைக்கும். 10 மணிக்கு மேல் தென்காசியில் டிஃபனைத் தேடியபோது, வடிவேலு போல கையை விரித்து பெப்பே காட்டிவிட்டார்கள். பசி தாங்கும் பார்ட்டிகள் என்றால், நேரடியாக 1.30 மணி வாக்கில் மதிய உணவில்தான் கை வைக்க முடியும்.
குண்டாறுக்கு, தென்காசி வழியாக பண்பொழிச் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இங்குள்ள திருமலைக் கோயில் எனும் இடம் ஆன்மிக அன்பர்களுக்கு சரியான ஆப்ஷன். பார்க்கிங் 50 ரூபாய் கட்டிவிட்டு திருமலைக் கோயிலுக்கு வண்டியை விட்டால்... அற்புதமான அனுபவமாக இருக்கிறது. ஊட்டி மலை, வால்பாறை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் பாதையெல்லாம் தோற்றுவிடும் அளவுக்கு பாதை செம போதையாக இருக்கிறது. குட்டிக் குட்டி ஹேர்பின் பெண்டுகளைத் தாண்டிப் போனால், டைம் மெஷினில் ஏறி நம்மை அழைத்துச் சென்றதுபோல இருந்தது. கோயிலில் அத்தனை பழைமை வாசம். 625 படிகள் ஏறித்தான் கோயிலுக்குள் நுழைய முடியும். இந்தக் கோயிலின் ஸ்பெஷல் - ஆளையே தள்ளிவிடும் அளவுக்கு ‘பரான் பரான்’ என்று சுழற்றியடிக்கும் காற்று. அடிக்கும் காற்றில் ஒரு ஸ்கார்ப்பியோவே ஆடியது என்றால் கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.
மலை இறங்கி குற்றாலத்துக்குத் திரும்பும் பாதையில் முன்கூட்டியே வளைய வேண்டும். கண்ணுப்புளி மெட்டு எனும் இடம் வருகிறது. இங்கேதான் குண்டாறு நீர்த்தேக்கம் இருக்கிறது என்றார்கள். மற்ற அணைகள், அருவிகளில் மீன் வறுவல் ஸ்பெஷல் என்றால், இங்கே ஸ்டார் ஃபுரூட், பனிக் கொய்யா, அன்னாசி போன்ற பழங்கள்தான் ஃபேவரைட். ‘‘எல்லாமே எங்க தோட்டத்துல விளைஞ்சதுங்க’’ என்றார் பழம் விற்கும் பாட்டி.
/
குண்டாறு அணையின் ஆழம் 36.6 அடி என்றார்கள். நெல்லை மாவட்டத்திலேயே குறைந்த அளவு அடி கொண்ட, ஒல்லியான அணை இதுதானாம். மதிய வெயிலுடன் இதமான தென்றல் காற்று போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. குண்டாற்றில் இப்போதுதான் படகுச் சவாரி ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், டாஸ்மாக்கைப்போல இதை தமிழக அரசு நடத்தவில்லை. ‘‘தனியார் போட்டிங் சார்.. எத்தனை பேரா இருந்தாலும் 300 ரூபாய்தான்’’ என்றார் படகோட்டி ஒருவர். கூட்டமும் அவ்வளவாக இல்லை. ‘300 ரூபாய் போனாப் போகுது’ என்று படகு சவாரி செய்தால், அற்புதமான அனுபவம் கிடைக்கும்.
‘‘அருவின்னாங்களே... காணுமே’’ என்று தேடினால், ஜீப் டிரைவர் ஒருவர் அப்ரோச் செய்தார். ‘‘குண்டாறு அருவிக்கு மேல போகணும் சார்... ஒரு ட்ரிப்புக்கு 2,000 ரூபாய் சார்... இருந்து கூட்டிட்டு வந்துடுவோம்’’ என்றார். இங்கேயும் எத்தனை பேர் என்றாலும் அதே கட்டணம்தான். அதனால், குண்டாறுக்கு நண்பர்கள் குழுவுடன் 8 பேர் பேக்கேஜா வந்தால், நமக்குத்தான் செமத்தியான லாபம். இப்போது சீஸன் டைம் என்பதால், பேரம் பேச யாருமே முன் வரவில்லை. குண்டாற்றின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜீப் சவாரிசெய்து அருவியை அடையலாம். ‘‘நைட் 2 மணிக்கு கூப்பிட்டாக்கூட நாங்க ரெடியா இருப்போம்’’ என்றார் ஜீப் டிரைவர். (ஜீப் சவாரிக்கு: 07639065883, 08122102300).
நாலரை கி.மீ கடுமையான காட்டுப் பாதை வழியாகத்தான் ஜீப் போனது. திடும்மென பாறைகள்... சலசலக்கும் ஓடைகள்... காலைப் புதைக்கும் மணல்திட்டுகள் வழியாக ஜீப் சவாரி செம த்ரில்லிங். ஜீப்பைத் தவிர இங்கே வேறு வாகனங்களை நினைத்தே பார்க்க முடியாது. 1.3 கி.மீ தாண்டி வருவது நெய்யருவி. ‘‘ஜீப் கட்டணம் அதிகமா இருக்கே’’ என்று ஃபீல் செய்பவர்கள், 1. கி.மீ தூரம் நடந்து வந்து நெய்யருவிக்கு வரலாம். நெய்யருவிக்கு இன்னொரு பெயர் ‘பப்ளிக் ஃபால்ஸ்’. அதாவது, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நெய்யருவிக்கு நடந்து வந்து குளிக்கலாம். தனிக்குடித்தனம் புகுந்த கப்புள்ஸ் மாதிரி, கூட்டம் ரொம்ப சிக்கென இருந்தது. ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. அருவித் தண்ணீர் செம ஜில்..! நெய்யருவியில், ஒகேனக்கல் மாதிரி ஆயில் மசாஜெல்லாம் செய்து விடுகிறார்கள். ‘‘இப்போதாண்ணே எங்களுக்கு டைம்... அதான் 150 ரூபாய்’’ என்று கொழுக் மொழுக்கென ஆயில் மசாஜ் நடந்துகொண்டிருந்தது. நெய்யருவிக்குப் பக்கத்தில் ஒரு மளிகைக் கடை உண்டு. சாப்பாடுகூட இங்கேயே சிம்பிளா சாப்பிட்டுக்கொள்ளலாம். செம ஜில்லென்ற குளியல், வெயிலுக்கு ஆனந்தமாக இருந்தது.
நெய்யருவியைத் தாண்டி ஜீப் பயணத்துக்கு மட்டும்தான் அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அடுத்து வருவது எல்லாமே தனியார் அருவிகளாம். 1 கி.மீ தூரத்தில், தன்னந்தனியாக ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. ‘அருண்பாண்டியன் அருவி’ என்கிறார்கள் இதை. இங்கே தங்கும் வசதியும் உண்டு. ஒரு நாள் வாடகை, ரூ.2,000. சமைத்துச் சாப்பிடவும் ஆப்ஷன் உண்டாம். மேலே போகப்போக, போன் நெட்வொர்க்கெல்லாம் காலியானது. ஆனால், மனசு நிறைவாக இருந்தது. ‘‘BSNL மட்டும் கிடைக்கும் சார்’’ என்றார் ஜீப் டிரைவர் விஷ்ணு. மனித நடமாட்டமே இல்லை. ஜீப் பயணம் மேலும் த்ரில்லிங்கைக் கூட்டியது.
மாலை 6.30 மணிக்கு மேல் விலங்குகளைப் பார்க்கலாம் என்றார் டிரைவர். ‘‘யானை, சிறுத்தை, காட்டெருமை எல்லாமே இருக்கு. கரடியும் இருக்குங்கிறாங்க... ஆனா, நான் இதுவரை பார்த்ததே இல்லை’’ என்றார். நடுநடுவே குட்டிக் குட்டியாய் அருவிகள். எங்கு வேண்டுமானாலும் ஜீப்பை நிறுத்தி குளிக்கலாம். மேலே போகப் போக, குண்டாறு அருவி வந்தது. பெரிதாகக் கூட்டம் இல்லை. ஒரே ஒரு குடும்பம் மட்டும் என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தது. அருவி அமைந்திருந்த இடமே அதகளமாய் இருந்தது.
‘இசை’ பட ஹீரோயின் மாதிரி தன்னந்தனியாய் அருவியில் ஃப்ரீடம் பாத் எடுத்துவிட்டு, கொண்டுவந்த கட்டுச்சோற்றைப் பிரித்துச் சாப்பிட்டால்... வெயிலை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. குற்றாலத்துக்குக் கிளம்புபவர்கள், அப்படியே குண்டாறு பக்கமும் வண்டியைத் திருப்பினால், ஓர் அற்புதமான அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.

No comments:
Post a Comment