Sunday, May 6, 2018

'மலேசியா டூ லண்டன்... விமானத்தில் பறந்த முதலைக்குட்டிகள்..!''

MUTHUKRISHNAN S

 
06.05.2018



லண்டன் ஹித்ரு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஓர் சரக்கு விமானம் சென்றது. அந்த விமானம் லண்டன் ஹித்ரு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், அங்கு வழக்கம்போல சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் இருந்த சரக்கு பெட்டிகளை ஆய்வு செய்து விமானநிலையத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில், அங்கிருந்த மரத்தாலான ஐந்து பெட்டிகளுக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் வந்தது. அதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்தப் பெட்டியை உடைத்து ஆய்வு செய்ய மேலதிகாரிகளிடம் உத்தரவு பெற்றனர். அதன்பின்னர், அந்தப் பெட்டிகள் உடைக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் தலா 10 வீதம் 49 முதலைக்குட்டிகள் உயிருடன் இருந்தன. ஒரு முதலைக்குட்டி இறந்த நிலையில் கிடந்தது.



இதுகுறித்து விமான நிலையத்தின் அதிகாரிகள் கூறுகையில், ''இந்த முதலைகளுக்கு ஒரு வயது இருக்கும். இது கடல் நீர் முதலைகள். சிறிய பெட்டி என்பதாலும் நீண்ட தூர பயணத்தினாலும் பசி எடுத்து அவை அங்கும் இங்கும் செல்ல முயன்றிருக்கும்; குரல் எழுப்பி இருக்கும். அவைகளுக்குள் சண்டை போட்டதாலும் அதன் கோபக் குரல் அதிகமாகி வெளியே கேட்டிருக்கலாம். முதலைக் குட்டிகள் உயிரோடு விமானத்தில் கடத்தி வரப்பட்டது ஹித்ரு விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது'' என்றார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024