Tuesday, May 8, 2018


திருமலையில் நாகப்பாம்பு: பக்தர்கள் ஓட்டம்

By திருப்பதி, | Published on : 08th May 2018 12:44 AM

திருமலையில் நாகப்பாம்பைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

திருமலையில் கல்யாண மண்டபம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தர்கள் தங்கள் வாடகை அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சீறிப் படமெடுத்தபடி ஒரு நாகப்பாம்பு சென்று கொண்டிருந்தது. அதை கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் நாயுடுவிற்கு தகவல் அனுப்பினர். ஆனால் அவர் திருமலையில் இல்லை.

எனவே வனத்துறை ஊழியர்கள் கல்யாண மண்டபம் பகுதியில் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுத்து பாம்பைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணிநேரம் போராடி அந்தப் பாம்பைப் பிடித்து பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு மூடி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அதன்பின் அவ்வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024