Friday, June 1, 2018

40 தலைமை ஆசிரியர் ஒரே நாளில் ஓய்வு

Added : ஜூன் 01, 2018 01:32

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர். உதவி தலைமை ஆசிரியர், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்பட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில், 100 மேல்நிலை, 112 உயர்நிலை, 837 நடுநிலை, 325 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 19 மேல்நிலைப் பள்ளி, நான்கு உயர்நிலைப் பள்ளி, 17 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம், 40 பேர், நேற்று ஓய்வு பெற்றனர்.இதையடுத்து, அந்தந்த பள்ளிகளில், உதவி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 'தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், பதவி உயர்வுக்கான பட்டியலில், முதல் இடத்தில் உள்ள ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக செயல்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...