Saturday, June 2, 2018

மாநில செய்திகள்

ரஜினிகாந்த் 5-ந்தேதி இமயமலை பயணம் 30 நாட்கள் தங்குகிறார்




படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 5-ந்தேதி இமயமலைக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு 30 நாட்கள் தங்குகிறார்.

ஜூன் 02, 2018, 04:14 AM

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் வெளியானது. அந்த படம் பெரிய வெற்றி அடைந்தது. அதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டது. படத்தை ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்து வெளியிடுகிறார்.

கடந்த சில மாதங்களாக ‘காலா’ படப்பிடிப்பு மும்பையிலும், சென்னையிலும் நடந்து முடிந்து இருக்கிறது. வருகிற 7-ந்தேதி ‘காலா’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுப்படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

ரஜினிகாந்த் அந்த புதுப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், அந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பேசினார்.

அதன்பின்னர், படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக கார்த்திக் சுப்புராஜூம், ஒளிப்பதிவாளர் திருவும் இமயமலைக்கு சென்றனர். சென்னை திரும்பிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நேற்று மீண்டும் நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.

அப்போது ‘படப்பிடிப்பு இடமான இமயமலையில் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும்? அங்கு எடுக்கப்படும் காட்சிகள் என்ன?’ என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்திடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

அவரைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினிகாந்தின் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறார். அதுபற்றி அவர்கள் இருவரும் ஆலோசித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக 5-ந்தேதி சென்னையில் இருந்து இமயமலைக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். 6-ந்தேதி இமயமலை பகுதியில் புது படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 முதல் 30 நாட்கள் வரை ரஜினிகாந்த் அங்கு தங்கி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...