Saturday, June 2, 2018

தேசிய செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு எதிராக வழக்கு அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு



மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘சங்கல்ப் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 02, 2018, 05:15 AM

புதுடெல்லி,

‘‘நீட் தேர்வு வினாத்தாள், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும்போது, அந்த மொழி பெயர்ப்புகளில் பிரச்சினைகளும், தவறுகளும் ஏற்படுவதால், அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’ என அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் நாகேஷ்வரராவ், சந்தான கவுடர் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நேற்று வழக்குதாரரின் வக்கீல் முறையிட்டார். ஆனால் அதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குதாரர் நிவாரணம் பெறுவதற்கு டெல்லி ஐகோர்ட்டுக்கு செல்லுமாறு கூறினர்.

ஆனால், இதுபற்றி வழக்குதாரரின் வக்கீல் கூறுகையில், ‘‘இது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. எனவே திங்கட்கிழமை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் முறையிடுவேன்’’ என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025