நெட்டிசன் நோட்ஸ்: 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பாரத சமுதாயமா? பலாத்கார சமுதாயமா?
Published : 18 Jul 2018 17:19 IST
சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
அப்பாவி
நம்முடைய அலைபேசியின் இணையத்தில் கிடக்கும் விடயங்களுக்கு எந்த தணிக்கை துறையும் இல்லை. இனி நாம்தான் நம் குழந்தைகளுக்கு தொடுதல்(Good Touch & Bad Touch) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இனி ஒரு அயனாவரம் குடியிருப்பு சம்பவம் உலகில் எங்கும் நடைபெறக்கூடாது
அஜாதசத்ரு
அயனாவரம் காது கேளா-வாய் பேசா சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு அந்த 22 பேர் மட்டுமா காரணம்?! # நம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பின்மைதானே காரணம்?!
S Amudhan
சமூக வலைதளங்களில் கோபத்தை கொட்டிக்கொண்டு இருக்கும் நேரத்திலேயே அயனாவரம் பாலியல் கொடுமை போன்று இன்னொன்று நடந்து விடுகிறது..POCSO சட்டமெல்லாம் குற்றவாளிகளின் காதுக்கு போய் சேருகிறதா??
அரசு குற்றவாளிகள் பயப்படும்படி செய்ய வேண்டும். பெற்றோர் ஆண் குழந்தைகளை நல்லபடி வளர்க்க வேண்டும்.
Senthil guru
ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு தன் தாயும், சேயும், உடன்பிறப்புகளும் பெண் தான் என்று நினைவில் வரவில்லையா?
ர.நந்துரவிச்சந்திரன்
மிகப் பெரிய சோகம்..
மனிதத்தன்மையின் நம்பிக்கையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்..
"அயனாவரம் சம்பவம்"
வணங்காமுடி
அயனாவரம் சிறுமி சீரழிக்கப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை வழக்கறிஞர்கள் தாக்கினார்களாம்.
நல்ல முன்னேற்றம் அப்படியே உங்க பார் கவுன்சிலை கூட்டி சிறுமிகளுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடமாட்டோம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்க..
ஆனந்த்
வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமிக்கு வயது
பதினொன்று.
வன்புணர்வில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை பதினாறு.
இஃது,
பாரத சமுதாயமா?
பலாத்கார சமுதாயமா?
வேதியன்
குற்றம் சார்ந்த எண்ணம் வருகிறதென்றால் தண்டனையின் வீரியம் பத்தவில்லை என்று அர்த்தம்
Karthik Rangaraj Namakkal, Chennai and Nagercoil
சட்டத்தை கடுமையாக மற்றும் விரைவாகத் தாருங்கள்...
Alex Pandiyan JB
வன்புணர்வு பற்றி பதிவிடும் நண்பர்களுக்கு முதலில் sex, molested, intercourse, love making பற்றிய புரிதல் வேண்டும். பெண்களின் கவர்ச்சி மிகுந்த ஆடைகளே காரணம் போன்ற பிற்போக்குத்தனமான பதிவுகளை தவிர்க்கலாம். வன்புணர்வுக்கு முக்கியக் காரணம் ஆண்களின் வக்கிர சிந்தனை மட்டுமே காரணம்.
tamil
சென்னை அயனாவரம் சிறுமி பலாத்காரம்:
இந்த மாதிரி மிருகங்களுக்கு தகுந்த பாடம் சாகும்வரை ஜெயில்.
Devi Somasundaram
1. சென்னைல யாரும் தன் அபார்ட் மென்ட்டை திறந்து போடுவதில்லை. அபார்ட்மென்ட்டில் காலியாக இருந்த வீட்டில் தான் வன்புணர்வு செய்யபட்டதாக சொல்லப்படுகிறது....அப்படி யார் 7 மாதம் தன் வீட்டைக் கண்டுக்காம திறந்து போடுகிறார்கள் ? .
2 ..மயக்க ஊசி போட்டா திரும்பத் தெளிய குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்..அத்தனை மணி நேரமா விளையாட அனுமதித்து தேடாமல் இருந்திருப்பார்கள்..அதும் 7 மாதமா. ..டெய்லி 4. மணி நேரம் குழந்தை காணாமல் போவதை கண்டுபிடிக்கலையா.. அசந்தர்ப்பமா கூட அவள் தேடப்படவில்லையா?
3 .மயக்க மாத்திரை தந்தால் அது தொடர்ச்சியா மயக்கத்தில் வைக்கும்..பள்ளியிலோ, வேனிலோ, பக்கத்து வீட்டிலோ கவனிக்காமலா இருந்திருப்பார்கள் ?
4..மயக்க ஊசி அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்காது.மெடிக்கல் ப்ராக்டிஷ்னர் அனுமதி இல்லாம வாங்க இயலாது .யார் அனுமதித்தது .எந்தக் கடையில் வாங்கினார்கள்..அவர்கள் கைது செய்யப்பட்டனரா ? .
5..18-ல் இருந்து வகை வாரியா வயது நம்பர் தரப்பட்டுள்ளது. சின்ன பையனுக 7 மாதமா ஒளறாம இருப்பார்களா...தண்ணி போட்டா நண்பர்கள் கிட்ட ஒளறிடுவானுக..
6...எதோ இந்த சம்பவத்தில் சரி இல்லைன்னு உள்ளுணர்வு சொல்லுது ....எதுன்னு சொல்ல தெரில..
7 ..போக்சோ ஆக்ட். நான் பெயிலபிள். .ஒரு வருடத்தில் கேஸ் முடித்து தீர்ப்பு வழங்கியாக வேண்டும்..
Elamathi Sai Ram
அயனாவரம் சம்பவத்தில், கொன்றுவிடுங்கள், எரித்து விடுங்கள் போன்ற பதிவுகள் ஆற்றாமையில் இடப்படுபவை. நீதியின் மேல், நீதி வழங்கும் மன்றங்களின் மீது நம்பிக்கையற்று சொல்லப்படுபவை.
மாறாக, கொல்வதையே நீதியாகக் கோரமுடியாது.
குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட 17 பேரும், வழக்கமாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபவர்கள் அல்ல எனத் தெரிகிறது. ஆனால் 12 வயதுப் பெண் குழந்தை இவர்கள் அனைவரது பாலியல் வக்கிரத்துக்கும் ஆளாகிறாள். அவள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. குடும்பத் தலைவனாக, அண்ணனாக, தம்பியாக, சக மனிதனாக நம்மிடையே, வாழ்ந்து நினைத்து பார்க்க முடியாத வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளனர். இதுதான் கடுங்கோபத்தை உண்டாக்குகிறது. கிட்டத்தட்ட ஒரு குழந்தையைக் கடத்தி, கும்பலிடம் விற்று காசு பார்க்கும், child trafficking குற்றத்திற்கு ஒப்பானது. நமக்குத் தெரியாமல் எங்கோ நடக்கும் பயங்கர குற்றம் நாம் வசிக்கும் இடத்திலேயே மிகச் சாதாரணமானவர்களால் நிகழ்த்தப்படுகிறது.
அச்சத்தை விடுங்கள். கடும் எரிச்சலும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது.
இது தொடர்ந்து நடக்கிறது. ஆசிஃபா பாலியல் பலாத்கார கொலை பேரதிர்ச்சியை நாம் கண்ட பிறகு, தொடர்ந்து இது போன்ற செய்திகள்.. ஒன்றையொன்று தூண்டப்படுகின்றன போலும்.
பாலியல் இச்சை கொண்ட நிறைய ஸோம்பிகள் நம்மைச் சுற்றிலும் வாய்ப்புகளுக்காக காத்துக்கிடக்கினறன.
இவர்களுக்கிடையேதான் நல்ல நண்பர்களும், உறவுகளும் கைப்பிடித்துக்கொள்ள இருக்கிறார்கள் என்று நிச்சயமாக நம்புவோம். முரண்தான் வாழ்க்கை போலும்.
Deepa Janakiraman
பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த சம்பவத்தைப் பற்றி ‘பகுத்தறிவோடு இதை யோசிக்க வேண்டும்’ என்கிற ரீதியில் எழுதப்பட்ட நிலைத்தகவல்களை ஃபேஸ்புக்கில் வாசித்தேன். பகுத்தறிவு என்பது உணர்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டு யோசிப்பது தான் என்று இங்கு விதைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.
நடந்த சம்பவம் உண்மை என காவல்துறையும், மருத்துவத்துறையும் சொல்லியாயிற்று. சிறுமியும் குற்றவாளிகளை அடையாளப்படுத்தியிருக்கிறாள்.
அந்தக் குழந்தையை நினைத்தால் பதறுகிறது. பேரச்சம் எழுகிறது இந்தப் பதற்றமும் அச்சமும் உண்மையானது. இங்கு உண்மை என்பது பெண், ஆண் குழந்தைகளை யாரிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்பது தான். எங்களைப் போன்ற இதற்கெல்லாம் பகுத்தறிவின்றி அதீதமாய் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு உங்களிடம் தீர்வு இருந்தால் சொல்லுங்கள். ஏனெனில் எந்த நேரமும் எங்களால் சாந்தமாய் இருக்க முடிவதில்லை. நாங்கள் இந்த சாதிக்காரன் தான் தவறு செய்வான் என்றும் முடிவு செய்வதில்லை. கருப்பா, சிவப்பா என்று பார்ப்பதில்லை. எங்களுடைய ஒரே கொந்தளிப்பு எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல அனைத்து பெண் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டுமே என்பதாகத் தான் இருக்கிறது.
எங்கள் அச்சமெல்லாம் பிளம்பரையும் நம்பமுடிவதில்லை, பேராசியரையும் நம்பமுடிவதில்லை என்பதாகவே உள்ளது.
Kirthika Tharan
பெண் உரிமை , சம நிலை எல்லாம் சரி. ஆனால் ஏதும் அறியாத ஒரு பெண் இங்கு உள்ளே நுழையும் பொழுது ஆசை வார்த்தைகள், பேரன்பு, நேசம் என்று பேசியே கவிழ்க்கும் பல போலி ஆண்களும் வன்புணர்வுக்கு எதிராக பொங்குவதுதான் முரண்.
ஆண், பெண் நட்பின் மீதான நம்பிக்கையில் பலர் வெந்நீர் ஊற்றிக்கொண்டே இங்கு இன்னொரு வேஷம் போடுவதும் அறிவோம்.
திறக்கப்படாத அதர்ஸ் இன்பாக்ஸில் ஆயிரக்கணக்கில் மெசெஜ்கள் .அதில் பாலியல் வக்கிரம் தோய்ந்து பாதியாவது இருக்கும்
ஆசையாய் பேசி மனம் மாற்றுவது சட்டப்படி குற்றமாம். ஆண்களுக்கு தண்டனை உண்டு என்கிறது. அதாவது செக்ஷன் 497 படி..இன்னொருவரின் மனைவியோடு..கணவரின் சம்மதம் இன்றி உறவு வைத்துக்கொண்டால் ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை( இதை நீக்க போரட்டமும் நடக்கிறது)
பெண்களுக்கு அனபுதான் பலம், பலவீனம் ..பலவீனத்தை பயன்படுத்தும் எவரும் கோழைகள்.
Geethappriyan Karthikeyan Vasudevan
இப்போது அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தேவை பெற்றோர் உற்றாரின் அரவணைப்பும் தான், அக்குழந்தைக்கு நல்ல மனோதத்துவ சிகிச்சை அளித்து இதே புரையோடிய சமூகத்தில் எதிர் நீச்சல் போட்டு சாதிக்கும் வீராங்கனையாக மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

No comments:
Post a Comment